தஞ்சை ரெயில் நிலையம் அருகில் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம்

15

12118

211816தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட சார்பாக தஞ்சை நகரத்தில் இரயில் நிலயம் அருகில், பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரியும் லிபரான் கமிஷன் அறிக்கையின்படி வாஜ்பாய், அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி, உட்பட 68 குண்டர்களை கைது செய்ய கேரியும் மாபெரும் கண்டனம் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் அன்வர் அலி அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் முஜ்புர் ரஹ்மான் முன்னிலை வகித்தார் சகோ கோவை அப்துல் ரஹீம் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார் இந்த ஆர்பாட்டத்தில் ஆண்களும் பெண்களும் ஆயிரத்திர்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட பொருலாளர் நைனா அவர்கள் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சி ஏறப்பாட்டை தஞ்சை நகர தலைவர் அப்துல் காதர் தலைமையில்அனைத்து நிர்வாகிகளும் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!