தஞ்சை நகரில் கல்வி கருத்தரங்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தஞ்சை தெற்கு மாவட்டம், “தஞ்சை நகரம்” சார்பாக பத்தாவது மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு “கல்வி கருத்தரங்க முகாம்”  கடந்த 26-2-2011 அன்று மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை தஞ்சை நகர தவ்ஹீத் மர்கசில் நடைப் பெற்றது.
.
இதில் ஷமீம் “தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?” என்ற தலைப்பிலும், தஞ்சை நகர பொருளாளர் ரிஸ்வான் அஹ்மத் “இன்டர்நெட்டின் பயன்பாடுகள்” என்ற தலைப்பிலும், தாயீ உமர் “இஸ்லாத்தில் கல்வியின் சிறப்புக்கள்” என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு பயன் பெரும் பொருட்டு கல்லூரி சம்பதமான விபரங்கள் அடங்கிய “College Data Book” இலவசமாக பல மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது

பத்தாவது மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து பயன் பெற்றனர். இறுதியில் கல்வி சம்பதமான “கேள்வி பதிலுடன்” நிகழ்ச்சி இனிதே முடிந்தது.

மேலும்