தஞ்சை நகரத்தில் நடைபெற்ற மாபெரும் பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

101020091261010200912501101020091251010200912410102009123101020091191010200911710102009111தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை நகரத்தில் மாதந்திர பெண்கள் பயான் 10.10.09 சனி கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு தஞ்சை நகர தாஃவா சென்டரில் நடைபெற்றது.

இந்த நிகழ்சியில், மாநில பேச்சாளர் யாசர் அராஃபத் இம்தாதி அவர்கள் தொழுகையின் சிறப்;பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்; அதை தொடர்ந்து சமீமா ஆலிமா அவர்கள். கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள் இந்த நிகழ்சியில் நூற்றுக்கு மேற்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

நிகழ்சியின் இறுதியில், கடந்த மாதம் பெண்களுக்கான குர்ஆன் ஆய்வு திறன் போட்டிக்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டது இதில் 63 சகோதரிகள் மிக ஆர்வமாக கலந்து கொண்டனர், இதில் சரியான பதில் எழுதிய 13 சகோதரிகள் தேர்வு செய்யபட்டது.

தேர்ந்தடுக்கபட்ட சகோதரிகளுக்கு ஒரு வருடத்திர்க்கு தீன்குலப் பெண்மணி மாத இதழ் பரிசாக வழங்கப்பட்டது.மேலும் அனைத்து சகோதரிகளுக்கும், ருபாய் 2500 மதிப்பிலான, துவாக்களின் தொகுப்பு மற்றும் நபி வழி தொழுகை என்ற புத்தகமும் ஊக்க பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

நிகழ்சி ஏற்பாட்டை தஞ்சை நகர தலைவர் அப்துல் காதர் தலைமையில் அனைத்து நிர்வாகிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்துருந்தனர். எல்லா புகழும் இறைவனுக்கே.