தஃப்தர் புத்தகம் சம்பந்தமான முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக பதிவு செய்யும் திருமண தஃப்தர்கள் பல இடங்களில் தலைமை வழிகாட்டல் இல்லாமல், ஊருக்கு ஊர் வாசகங்கள் மாறு பட்டு இருப்பதாகவும், வேறுபட்டும், முக்கிய தகவல்கள் விடுபட்டதாகவும் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

இதை சரி செய்து மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வாசகம் கொண்ட தஃப்தர் புத்தகம் அடிக்க இருப்பதால் தங்களிடம் இருக்கும் தஃப்தர் புத்தகத்தின் ஒரு பக்க பிரதியை தலைமைக்கு அனுப்பி வைக்கும் படி கேட்டு கொள்கிறோம்.

இப்படிக்கு
M.S. சைய்யது இப்ராஹீம்
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்