டெஸ்டியூப் குழந்தைகளுக்கு எளிதில் வரும் ஆபத்து…!

test-tube-babyஇன்றைய உலகில் இயற்கையாக குழந்தைகளைப் பெற முடியாத பெற்றோருக்கு வரப்பிரசாதமாக இருப்பது In vitro fertilisation (IVF) என்று அழைக்கப்படும் முறை மூலம் உருவாக்கப்படும் குழந்தைகளாகும்.

இந்த முறையில் பெண்ணின் முட்டைக்கலமும் ஆணின் விந்துக்கலமும் உடலுக்கு வெளியே எடுக்கப்பட்டு பரிசோதனைக் குழாயில் அவை கருக்கட்ட அனுமதிக்கப்பட்டு உருவாக்கப்படும் நுகம், முளையம் என்ற நிலைக்கு வளர்ந்த பின் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்பட்டு குழந்தையாக வளரச் செய்யப்பட்டு,பிறப்பிக்கப்படுகிறது.

இப்போ இந்த முறையால் பிறக்கும் குழந்தைகள் மத்தியில் சாதாரண குழந்தைகளை விட நோய்களின் தாக்கம் அல்லது உடற் கோளாறுகள் அதிகம் என்று கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்.

குறிப்பாக இவ்வகையான குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தைக்கு உடல் நலக்குறைவு அல்லது மரபணு சார்ந்த கோளாறுகள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

அதிலும் இதய வால்வுப் பிரச்சனைகள், உணவுக்கால்வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் உதட்டுப் பிளவு போன்றவை அதிகம் ஏற்படுகின்றன.

எதிர்காலத்தில் இவ்வாறு IVF முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் தம்பதிகளிடம் இந்த முறையில் உள்ள ஆபத்துக்கள் குறித்தும் இவ்வாறான முறையில் பிறக்கும் குழந்தைகள் எதிர்கொள்ளக் கூடிய ஆபத்துக்கள் குறித்தும் விளக்கிச் சொல்ல வேண்டும் என்று விஞ்ஞானிகள் பரிந்துரை வழங்கியுள்ளனர்.

-அபு நபீலா