டெல்லி பத்திரிக்கையாளர் சந்திப்பு: நிருபர்கள் கேட்ட கேள்வியும் பதிலும்..

புது டெல்லியில் ரைஸினா ரோட்டில் உள்ள Press Club of India-வில் ஜூலை 4 மாநாடு சம்மந்தமாக தேசிய அளவிளான பத்திரிக்கையாளர் சந்திப்பு ஞாயிறு கிழைமை (2/05/10) காலை 11 மணிக்கு நடைபெற்றது. இதில் எஸ். சித்தீக், சர்வத்கான் கலந்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

சந்திப்பில் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளும் நமது நிர்வாகள் அளித்த பதிலும்..

ஹிந்துஸ்தான் எக்ஸ்பிரஸ் நிருபர் : 3.6% மட்டுமே பட்டம் படித்த முஸ்லீம்களுக்கு எதற்க்கு வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு? 10% இட ஒதுக்கீட்டை நிரப்பும் அளவிற்க்கு முஸ்லீம் மாணவர்கள் உள்ளனரா?

S. சித்தீக் : முஸ்லீம்கள் பின் தங்கி உள்ளதினால்தான் நாங்கள் இட ஒதுக்கீடு கேட்கின்றோம். நாங்கள் வேலைவாய்ப்பில் மட்டும் இட ஒதுக்கீடு கேட்கவில்லை கல்வியிலும்தான் 10% இட ஒதுக்கீடு கேட்கின்றோம். எனவே கல்வியிலும் வேலையிலும் இட ஒதுக்கீடு கொடுக்கும்போது முஸ்லீம் பட்டதாரிகளுக்கு பற்றாகுறை வராது. மேலும் பட்டம் படித்தவர்களுக்கான அரசுவேலைகளில் 10% இட ஒதுக்கீடு கொடுத்தாலும் எண்ணிக்கை முஸ்லீம் பட்டதாரிகளின் எண்ணிக்கையை விட மிக குறைவாகவே இருக்கும் இதானால் தகுதிவாய்ந்த முஸ்லீம் மாணவர்களுக்கு பஞ்சம் இருக்காது. இட ஒதுக்கீடு வழங்கி தகுதியான மாணவர்கள் கிடைக்கவில்லை என அரசு கருதினால். அரசு விரும்பும் தகுதியான முஸ்லீம் மாணவர்களை ஒன்று திரட்டிதர நாங்கள் (TNTJ) தயாராக இருக்கின்றோம் (இலவசமாக). முஸ்லீம்களை பட்டம் படிக்க வைக்க அனைத்துமுயற்சிகளையும் எடுத்துவருகின்றோம்.

ஹிந்துஸ்தான் எக்ஸ்பிரஸ் நிருபர் : முஸ்லீம்களின் கல்வி வளர்சிக்கு உங்கள் அமைப்பு என்ன செய்துள்ளது?

S. சித்தீக் : இதுவரை தமிழகத்தில் எந்த முஸ்லீம் அமைப்புகளும் செய்திராத கல்வி சேவையை நாங்கள் செய்துவருகின்றோம். இதுவரை 234 கல்வி கருத்தரங்குகள், விழிப்புணர்வு நிகழ்சிகளை தமிழகத்தில் 152 இடங்களில் எல்லா மாவட்டங்களிலும் நடத்தி உள்ளோம். வசதியற்றவர்களுக்கு கல்வி உதவி செய்துவருகின்றோம். மாணவர்கள் அதிகமதிப்பெண் எடுக்க இலவச பயிற்சி அளிக்கின்ரோம், இலவசமாக ஆங்கில மொழிதிறன் வளர்க்கும் வாகுப்புகள், முகாம்களை தமிழகம் முழுவதும் நடத்திவருகின்றோம். இன்னும் இந்த சேவைகளை பண்மடங்காக பெருக்க திட்டங்கள் வகுத்து செயல்பட்டுவருகின்றோம்.

ஹிந்துஸ்தான் எக்ஸ்பிரஸ் நிருபர் : சிறந்த சேவை, உங்கள் கல்வி சேவையை தமிழகத்தோடு இல்லாமல், முஸ்லீம்கள் மிகவும் பிந்தங்கிய மாநிலங்களான உத்தரபிரதேசம், பீஹார் போன்ற மாநிலங்களிலும் செய்யுங்கள், உங்கள் சமுதாயத்தை ஆங்கிலம் படிக்க சொல்லுங்கள்.

S. சித்தீக் : நன்றி

ஹிந்துஸ்தான் எக்ஸ்பிரஸ் நிருபர் : நீங்கள் தேர்தலில் போட்டியிடும் கட்சியா?

S. சித்தீக் : தேர்தலில் போட்டி இடக்கூடாது என்பதை அடிப்படை சட்டமாக கொண்ட அமைப்பு எங்கள் அமைப்பு. நாங்கள் தேர்தலில் போட்டி இட மாட்டோம்.

ஈ-டிவி நிருபர் : நீங்கள் சாதிரீதியாக, மதரீதியாக இட ஒதுக்கீடு கேட்கின்றீர்களா?

S. சித்தீக் : நாங்கள் சாதிரீதியாகவோ மத ரீதியாகவோ இட ஒதுக்கீடு கேட்கவில்லை. சமூக – பொருளாதாரத்தில் பின் தங்கிய முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு கேட்கின்றோம்.

ஈ-டிவி நிருபர் : முஸ்லீம்களில் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாமா? அதாவது இட ஒதுக்கீட்டில் கிரிமி லேயர் பாலிசியை ஆதரிக்கின்றீர்களா?

S. சித்தீக் : அரசின் கிரிமி லேயர் பாலிசியை நாங்கள் ஆதரிக்கின்றோம். பெரும்பணக்கார முஸ்லீம்களுக்காக இட ஒதுக்கீடு கேட்க்கவில்லை சமூக – பொருளாதாரத்தில் பின் தங்கிய முஸ்லீம்களுக்கே இட ஒதுக்கீடு கேட்கின்றோம். அரசின் கொள்கைபடி மாதம் ரூ.37,500 சம்பளத்திற்க்கு கீழ் வாங்கும் முஸ்லீம்களுக்கே இட ஒதுக்கீடு கேட்கின்றோம்.

ஈ-டிவி நிருபர் : இந்துக்களில் எத்தனையோ பிரிவினர் பின் தங்கி உள்ளனர் அவர்களுக்கெல்ளாம் தனி இட ஒதுக்கீடு இல்லாமல், முஸ்லீம்களுக்கு மட்டும் ஏன் தனி இட ஒதுக்கீடு வேண்டும்?

S. சித்தீக் : அனைத்து பிரிவினரைவிடவும் முஸ்லீம்கள் மிகவும் பின் தங்கி உள்ளனர் என நீதிபதி சச்சார், ரங்கநாத் மிஸ்ரா ஆகியோரின் அறிக்கை சொல்கின்றது. தலித் சகோதரர்கள், மலைவாழ் மக்களை விட பிந்தங்கி உள்ள எங்கள் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு தேவை. தலித் சகோதர்களுக்கு 15 % இட ஒதுக்கீடு உள்ளதால், மழைவாழ் மக்களுக்கு 7.5% உள்ளதால் அவர்கள் எல்லா துறைகளிலும் 16% சதவீதமும், 8% வீதமுமாக இருக்கின்றனர், இட ஒதுக்கீடு இல்லாத முஸ்லீம்கள் அவர்களை விட பின் தங்கிய நிலை 2% முதல் 4 % வரைதான் கல்வி ,அரசு வேலைவாய்பில் இருக்கின்றனர். எனவே எங்களுக்கு இட ஒதுக்கீடு தேவை.

மேலும் எந்த மதத்தினருக்கும், சாதியினருக்கும் இட ஒதுக்கீடு கொடுப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை, இந்து மதத்தில் உள்ள எந்த பிரிவை சேர்ந்தவர்களுக்கும் அவர்களின் எண்ணிக்கை, சமூக – பொருளாதார நிலைக்கு ஏற்ப அரசு இட ஒதுக்கீடு வழங்கினால் அதை நாங்கள் வரவேற்போம்.

மேலும் ஜூலை – 4 மாநாடு சம்மந்தமாக பல்வேறு கேள்விகளை பத்திரிகையாளர்கள் கேட்டனர், பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சில முஸ்லீம் பத்திரிகையாளர்கள் நமது சேவைகளை பாராட்டினர், முஸ்லீம்களின் வளர்சிக்காக நடத்தபடும் நம் மாநாடு வெற்றியடைய சில யோசனைகளை தெரிவித்தனர். மேலும் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களுக்கு சென்று இட ஒதுக்கீடு சமந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். TNTJ-வை சேர்ந்த சகோ. நாகங்குடி சாதிக் பத்திரிக்கையாளர் சந்திப்பை மிக சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு தொலைகாட்சிகளிலும், டெல்லி, ஹைதராபாத், பெங்களூரில் வெளியாகும் பத்திரிக்கைகளில் வெளியானது.