டெல்லியில் நீதிபதி சச்சாரை சந்தித்த TNTJ நிர்வாகிகள்

கடந்த 30/04/10 – வெள்ளி கிழைமை காலை நீதிபதி சச்சாரை உச்ச நீதி மன்றத்தில் மாநில மாணவர் அணி துணை செயலாளர் M.சர்வத்கான் மற்றும் சகோ. நாகங்குடி சாதிக் ஆகியோர் சந்தித்தனர்.

அவரிடத்தில் நமது ஜூலை – 4  மாநாடு சம்மந்தமாக விளக்கினர், அவர் இரவு 7 மணிக்கு தெற்க்கு டெல்லி நியூ பிரன்ட்ஸ் காலனியில் உள்ள  தனது வீட்டிற்க்கு வருமாரு சொன்னார், அவர் வீட்டிற்க்கு சென்று மாநாட்டிக்கு அழைப்பு விடுத்தனர், வீட்டில் நமக்கு நல்ல மரியாதை வழங்கினார். சுமார் 40 நிமிடங்கள் உரையாடினார்.

மேலும் தீவிரவாதம், ஜூலை – 4 மாநாடு  பற்றிய தனது கருத்துக்களை தெரிவித்தார்.  பின்னர் மாநிலா மாணவர் அணி செயலாளர் S.சித்திக் அவர்களிடம் மாநாடு சிறப்பாக நடைபெற தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.