டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம்

450 ஆண்டுகால பாரம்பர்யம் மிக்க வரலாற்றுச் சின்னமாகவும் முஸ்­ம்களின் வழிபாட்டுத் தலமாகவும் விளங்கிய பாபரி மஸ்ஜித் டிசம்பர்6 1992ல் மதவெறியர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு இன்றோடு 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை இப்பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் எவரும் தண்டிக்கப்படவும் இல்லை.

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது இந்தியாவின் பிரதமராக இருந்த நரசிம்மராவ் உடனே மீண்டும் பள்ளிவாசல் கட்டித்தரப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

இந்திய அரசிய­ல் இருந்து அவர் காணாமல் போனதைப் போலவே அவரது வாக்குறுதியும் காணாமல் போனது.

பாபரி மஸ்ஜித் விவகாரம் தொடர்பான நீண்ட நெடிய வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் முஸ்­ம்களுக்கு காங்கிரஸ் மிகப் பெரும் துரோகத்தைத்தான் செய்திருக்கிறது. இந்த உண்மையை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்.

1949 ஆம் ஆண்டு டிசம்பர் 23 நள்ளிரவில் சமுக விரோதக் கும்பல் பாபரி மஸ்ஜிதுக்குள் நுழைந்து ராமர், சீதை, லெட்சுமணன் சிலைகளை வைத:து பிரச்சினையைத் துவக்கி வைத்தது.

அப்போது உ.பி மாநில காங்கிரஸ் அரசின் முதல்வராக கோவிந்த் வல்லப பந்த் இருந்தார்.

அத்துமீற­ல் ஈடுபட்ட சமுக விரோதக் கும்பல் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து சிலைகளை அப்புறப்படுத்தி இருந்தால் இன்று முஸ்­ம்கள் வீதியில் நின்று போராட வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் ப­யாகி இருக்காது. நாட்டில் இரத்த ஆறு ஓடி இருக்காது. அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவும் இவ்விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து இந்திரா காந்தி ஆட்சியின் போது பாபரி மஸ்ஜித் பூட்டப்பட்டது.

பின்னர் ராஜீவ் காந்தி பூட்டிய பள்ளிவாச­ன் பூட்டைத் திறந்து பூஜிக்க வழி வகுத்துக் கொடுத்தார். பின்னர் நரசிம்மராவ் ஆட்சியின் போது பள்ளிவாசல் திட்டமிட்டு தகர்க்கப்பட்டது.

ஆக பாபரி மஸ்ஜிதின் ஒவ்வொரு அசைவிலும் காங்கிரஸ் அரசு முஸ்­ம்களுக்கு இழைத்த அநீதி வெளிப்படுகிறது.

ஆனாலும் கால மாற்றத்தில் காங்கிரஸ் கடந்த ஆறு ஆண்டுகள் அமர்ந்திருந்த போது பாபரி மஸ்ஜித் இடிப்பில் தொடர்புடைய பாஜக தலைவர்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து நியாயத்தின் பக்கம் நின்றது.

இப்போது அது ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துள்ளது. இந்நிலையில் பாபரி மஸ்ஜித் விஷயத்தில் கடந்த காலங்களில் தவறுகளுக்கு பரிகாரம் காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

  1. பாபரி மஸ்ஜித் நிலத்தை உடனடியாக முஸ்­ம்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
  2. பாபரி மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகளான அத்வானி உமாபாரதி முரளி மனோகர் ஜோஷி அசோக் சிங்கால் உள்ளிட்ட அனைத்து குற்றவாளிகள் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  3. 59 ஆண்டுகளாக அலைகக்கழிக்கப்படும் பாபரி மஸ்ஜித் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண உடனடியாக தனியாக விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும்.
  4. இதைச் செய்தால் தான் உண்மையாகவே இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும். நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றே அனைவரையும் கட்டுப்படுத்த முடியும். பேச்சுவார்த்தை முலம் ஒரு காலத்திலும் தீர்வு ஏற்படாது என்பதை அனைவரும் உணர்ந்து நீதிமன்றத் தீர்ப்பு கட்டுப்பட வேண்டும்.

இதை வ­யுறுத்தி தான் பாபரி மஸ்ஜீத் இடிப்பு தினமான இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்களை  நடத்தி  வருகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்