டாஸ்மார்க் கடையை அகற்றக் கோரி கலக்டரிடம் மனு கொடுத்த நாகை வடக்கு TNTJ

சீர்காழி, அருகில் உள்ள திருமுல்லைவாசலில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மார்க் கடை ஒன்று உள்ளது. அதன் அருகில் பள்ளிக் கூடம் பேருந்து நிலையம் அதிகமான முஸ்லீம் மற்றும் மாற்று மத சகோதரர்கள் வீடுகள் உள்ளன.

அங்கு வரும் குடிகாரர்கள் குடித்துவிட்டு அங்குள்ள பெண்களிடம் தகாத வார்த்தைகளால் திட்டுவது, ஆடை, இன்றி, தன்நிலை மறந்து கிடப்பது போன்ற அநாகரிக செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதை பொருக்க முடியாமல். அங்குள்ள பொது மக்கள்  கடந்த 21.03.2010 அன்று TNTJ நாகை வடக்கு மாவட்ட நிர்வாகிகளிடம் நடந்த விபரங்களை கூறி டாஸ்மார்க் கடையை அப்புறப்படுத்தி தர வேண்டும் என்று கடிதம் தந்தனர்.

உடன் களம் இறங்கிய நிர்வாகிகள் கடந்த 25.03.2010 கலை 11,மணிக்கு  கலக்டர் அலுவலகம் சென்றனர் தேர்வு நேரம் என்பதால் மாவட்ட ஆட்சியர், பறக்கும் படை பணிக்கு சென்றுவிட்டதால். அவரது நேரடி உதவியாளர் அவர்களிடம் மனுவை கொடுத்தனர்.
ஆட்சியாளரின் நேரடி உதவியாளர் செய்தியின் முக்கியத்தை கருத்தில் கொண்டும் உடன்
நடவடிக்கை எடுக்க வலியுருத்துவதாக கூறினார்.

மாவட்ட நிர்வாகிகள் தலைவர் H.M. புஹாரி,து.த. A.W. சாதிக்,ஆகியோருடன்.நாகை தெற்கு மாவட்ட தலைவர் சேத்தப்பா,து.செ.தமுசுதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஒரு வாரக்காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை இன்ஷா அல்லாஹ் மது கடையை முற்றுகையிடுவது  என மாவட்ட நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்