ஜமால் உஸ்மானி ராஜினாமா தொடர்பாக…

கடந்த 24.09.17 அன்று நடந்த மாநிலப் பொதுக்குழுவில் மாநில நிர்வாகத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டதை தாங்கள் அறிவீர்கள்.

அதில் தேர்வு செய்யப்பட்ட 16 மாநிலச் செயலாளர்களில் ஒருவரான ஜமால் உஸ்மானி அவர்கள் சென்னைக்கு வந்து பணி செய்வதாக ஒப்புக் கொண்டிருந்தார்.,

அவர் வசித்து வரும் பத்தமடை கிளையில் உள்ள மத்ரஸாவில் இருந்து பணியாற்ற வேண்டும் என்று அவரது கிளை நிர்வாகிகள் கேட்டுக் கொண்ட அடிப்படையில், தன்னால் சென்னைக்கு வந்து பணியாற்றும் சூழல் இல்லை என்பதால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

இதையடுத்து கடந்த 06.10.17 அன்று அவர் ராஜினாமா செய்ததை மாநில நிர்வாகக் குழு ஏற்றுக் கொண்டது.

மார்க்கப் பிரச்சாரங்களில் தொடர்ந்து அவர் ஈடுபடுவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இப்படிக்கு
M.S. சைய்யது இப்ராஹீம்
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்