ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய ஊர் நாட்டாமை அனுமதி மறுப்பு: நல்லடக்கம் செய்த பட்டுக்கோட்டை TNTJ

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தவ்ஹீத் சகோதரரின் தயார் கடந்த 20-5-2010 அன்று இறந்து விட்டார். இவரது ஜனாஸாவிற்கு அப்பகுதியில் உள்ள மத்ஹப் ஜமாஅத்தை சேர்த்த பள்ளிவாசலில் நபி வழி அடிப்படையில் ஜனாஸா தொழுகை நடத்தி நல்லடக்கம் செய்ய ஊர் நாட்டாமை அனுமதி மறுத்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை TNTJ சகோதரர்கள் அந்த ஜனாஸாவை பள்ளியின் பின்புறம் வைத்து நபி வழி அடிப்படையில் ஜனாஸா தொகை நடத்த ஏற்பாடு செய்தனர்.

இறந்தவரின் மகன் ஜனாஸா தொழுகை நடத்திய பிறகு நபிவழி அடிப்படையில் அங்குள்ள மையவாடியில் TNTJ சகோதரர்கள் முன்னிலையில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.