தஞ்சை தெற்கில் ஜனவரி 4 ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஜனவரி 4 போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் கடந்த  07 – 11 – 2010 அன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பட்டுக்கோட்டை மர்கஸில் நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகிகள் முன்னிலைல் நடைபெற்ற இக்கூட்டத்தில் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் நவம்பர் 28 – 11 – 2010 அன்று நடைபெறும் சகோ பி.ஜே. கலந்து கொள்ளும் திருவாரூர் மாவட்ட மாநாட்டு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து வருகின்ற ஜனவரி 4 ஆம் தேதி அன்று சென்னை, மதுரை ஆகிய இரண்டு இடங்களில் நடைபெறுகின்ற கண்டன ஆர்பாட்டத்தின் அவசியத்தை மக்களுக்கு கொண்டு சென்று பல்லாயிரம் மக்களை திரட்டும் விதமாக கிளைகள் தோறும் சுவர் விளம்பரங்கள், தெருமுனை பிரச்சாரங்கள் மற்றும் டிஜிட்டல் பேனர்களை நிறுவவேண்டும் என வளியுருதப்பட்டது.