திருவாரூரில் ஜனவரி 4 ஆர்ப்பாட்டம் ஆலோசனைக் கூட்டம்!

ஜனவரி 4 ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 24-10-2010 அன்று மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 வரை திருவாரூர் மெரீனா மஹாலில் நடைபெற்றது.

மாநில செயலாளர் சகோ காஜா நூஹ் அவர்களின் தலைமையிலும் மாவட்ட நிர்வாகிகளின் முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் நவம்பர் 28-11-2010 அன்று சகோ பீ ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்துகொள்ளும் திருவாரூர் மாவட்ட ( சமுதாய விழிப்புணர்வு மாநாடு) க்கான ஆயத்தப்பணிகளை முடுக்கிவிடக்கோரியும்,அதனைதொடர்ந்து வருகின்ற ஜனவரி 4 ஆம் தேதி அன்று சென்னை,மதுரை ஆகிய இரண்டு இடங்களில் நடைபெறுகின்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் அவசியமும்,அதற்காக மக்களை மாவட்டத்திலிருந்து பல்லாயிரக்கணக்கில் திரட்ட வேண்டிய அவசியத்தையும் சகோ காஜா நூஹ் அவர்கள் உணர்த்தினார்கள்.