ஜனவரி 27 மதுரை ஆர்ப்பாட்டத்திற்கு செல்வோர் கவனத்திற்கு!

மண்டபங்களில் உள்ளவர்களும் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சார்ந்தவர்களும் காமராஜர் சாலை கீழவெளி வீதி தவிட்டுச் சந்தை தெற்கு வெளி வீதி வழியாக வாகனத்தில் வந்து டிவிஎஸ் பெட்ரோல் பங்க் (கிரைம் பிராஞ்ச்) அருகில் இறங்க வேண்டும்.

புதுக்கோட்டை, தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, நாகை தெற்கு, நாகை வடக்கு, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் பாண்டிக்கோவில் அருகில் உள்ள சர்வீஸ் ரோடு வழியாக ஏவி மேம்பாலம் கீழ வெளி வீதி தெற்குவெளி வீதி தவிட்டுச் சந்தை வழியாக வந்து கிரைம் பிராஞ்ச் அருகில் இறங்க வேண்டும்.

க்ரைம் பிரான்ச் அருகில் இறக்கிவிடும் அனைத்து வாகனங்களும் தமுக்கத்தைச் சுற்றியுள்ளகாந்தி மியூசியம், நீச்சல்குளம், லா காலேஜ், எக்கோ பார்க் பின்புறம், கரும்பு ஆலை ரோடு, ராஜா முத்தையா பின்புறம், ரேஸ் கோர்ஸ் ரோடு, பிடிஆர் மஹால் ரோடு, பாண்டியன் ஹோட்டல் அருகில், மாட்டுத் தாவணி பூ மார்க்கட் அருகில் சிட்கோ இடங்களில் நிறுத்திக் கொள்ளவேண்டும்.

எர்ணாகுளம் திருவனந்தபுரம் திருநெல்வேலி, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பழங்காநத்தம் நடராஜ் தியேட்டர் பைபாஸ் பாலம் ஆர்டிஓ ஆபிஸ் எதிர்புறம் வழியாக வந்து எல்லீஸ் நகர் பாலம் முன்பு இறங்க வேண்டும். இங்கேயே வாகனங்கள் பார்கிங்க செய்யப்பட வேண்டும்

தேனீ, திண்டுக்கல், நாமக்கல், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் காளவாசல் சந்திப்பு சோலைமலை தியேட்டர் அரசரடி ரயில்வே ஜங்சன் மேற்கு நுழைவாயில் அருகில் இறக்கி விடவும். இங்கேயே வாகனங்களை பார்கிங் செய்ய வேண்டும்.

பார்கிங் தொடர்பாக மேலதிக விபரத்திற்கு

எம் சுல்தான்  மைதீன் செல் – 9543593939 , 9080888804

எஸ் நாகூர் செல் – 9042998683