ஜனவரி 27 போராட்ட ஆலோசனைக் கூட்டம் – கடையநல்லூர்

அல்லாஹ்வின் கிருபையால், கடந்த 26. 12. 2010 (ஞாயிற்றுக்கிழமை) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பின் இன்ஷா அல்லாஹ் மதுரையில் நடைபெறயிருக்கும் ஜனவரி 27  பேரணி, ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக செயல் வீரர்கள் கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்றது.

நகர தலைவர் முஹம்மது கோரி அவர்கள் தலைமை தாங்கிய இக்கூட்டத்திற்கு டிஎன்டிஜே மாவட்ட துணைத் தலைவர் டிஎம். ஜபருல்லாஹ் அவர்களும் நகர மற்றும் நபிவழி பள்ளிவாசல் நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர்.

சகோதரர் யூசுப் பைஜி அவர்களும் சகோதரர் முஹிப்புல்லாஹ் உமரி அவர்களும் முறையே சமுதாய விழிப்புணர்வு மற்றும் ஜனவரி 27 குறித்தும் உரையாற்றினார்கள்.

முதற்கட்டமாக, மாநாடு மற்றும் பேரணி சம்பந்தமாக நகர நிர்வாகம் செய்துள்ள 16 க்கும் மேற்பட்ட சுவர் விளம்பரங்கள், 20 ஆட்டோக்களில் கட்டியுள்ள டிஜிட்டல் போர்டுகள், முதல் தவணையாக அடித்துள்ள 5000 பிட் நோட்டீஸ்கள் போன்ற முன்னேற்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.

மற்றும் இரண்டாம் கட்டமாக, வீதிகள் தோறும் விழிப்புணர்வு பிரச்சாரம், மின் கம்ப நோட்டீஸ், லோக்கல் டிவி விளம்பரம், மெகா சைஸ் டிஜிட்டல் போர்டுகள், வாகன பேரணி, வீடுகள்தோறும் வழங்கவுள்ள பிட் நோட்டீஸ் போன்ற செய்யவிருக்கும் பணிகள் குறித்தும் விளக்கப்பட்டது.