ஜனவரி 27 போராட்டம்: ஜமாத்தார்களுக்கு அனுப்ப வேண்டிய கடிதம்

ஜனவரி 27 போராட்டம் குறித்து  ஜமாஅத்தார்களுக்கும் அனுப்ப வேண்டிய கடிதம்:             

PDF வடிவில் Download

بسم الله الرحمن الرحيم

மரியாதைக்குரிய  பள்ளிவாசல் முத்தவல்லி மற்றும் நிர்வாகிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

கடந்த அறுபது ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பாபர் மஸ்ஜித் வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்ற மூவர் அடங்கிய பெஞ்ச் வழங்கிய அநியாயத் தீர்ப்பை குறித்து தாங்கள் அறிவீர்கள்.

பாபர் மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் 450 ஆண்டுகள் முஸ்லிம்களின் அனுபவத்தில் இருந்த –  இந்தியாவின் சிவில் சட்டப்படி முஸ்லிம்களுக்கு உடமையாக இருந்த – பாபர் மஸ்ஜிதுக்குச் சொந்தமான இடத்தில்  மூன்றில் இரண்டு பங்கு இந்துக்களுக்கும் ஒரு பங்கு முஸ்லிம்களுக்கும் என்று கேடு கெட்ட மூன்று நீதிபதிகளும் தீர்ப்பு கூறியுள்ளனர்.

அதிலும் குறிப்பாக எந்த இடத்தில் 450 ஆண்டுகள் தொழுகை நடத்தப்பட்டதோ, அந்தக் குறிப்பிட்ட இடத்தில் தான் ராமர் பிறந்தார் எனக் கூறி பள்ளிவாசலை தாரை வார்த்துக் கொடுக்கும் தீர்ப்பை எழுதிவிட்டனர்.

சில ஏக்கர் நிலங்களுக்காக நாம் 1949 முதல் அறுபது ஆண்டுகளாக போராடவில்லை. அல்லாஹ்வைத் தொழுத இடத்தில் கல்லையும் மண்ணையும் வணங்கக் கூடாது என்பற்காகவே நாம் போராடினோம். இதைச் சுற்றியுள்ள நிலத்தை நாம் இழந்து பள்ளிவாசலை மட்டும் பெற்றால் கூட சகித்துக் கொள்ள முடியும்.

இந்தச் சட்ட விரோதமான அநியாயத் தீர்ப்பின் மீது முஸ்லிம்களுக்கு கடுமையான கோபமும் அதிருப்தியும் இருந்தாலும் சட்ட ஒழுங்குப் பிரச்சனை வேண்டாம் என்று அசாத்திய மவுனம் காத்தோம்.

ஆனால் நாம்முடைய மவுனத்தை அநியாயத் தீர்ப்புக்கு நாம் அளிக்கும் சம்மதம் என்ற தோற்றம் திட்டமிட்டு ஏற்படுத்தப்படுகின்றது.

அலகாபாத் அநியாயத் தீர்ப்பை ஒட்டு மொத்த முஸ்லிம்களும் எதிர்க்கின்றோம்; கண்டிக்கின்றோம் என்பதை ஒன்று திரண்டு பிரகடனம் செய்யத் தவறினால் இதே வழி முறையைக் கையாண்டு நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளிவாசலாக நம்மிடம் இருந்து பறிக்கப்படும் என்பதை நாம் நினைத்து பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

நமது மஹல்லா பள்ளிவாசல்களில் ஒரு கற்சிலையை வைத்து விட்டு பள்ளிவாசல்களுக்குச் சொந்தம் கொண்டாடுவார்கள். நீதிமன்றம் உடனே பள்ளிக்கு சீல் வைத்து பல ஆண்டுகளுக்குப் பின் அதைக் கோவிலாக்க உத்தரவு போடாது என்று யாராலும் கூற முடியாது.

பள்ளிவாசல் எங்களுக்குச் சொந்தம் என்று யாராவது வழக்குப் போட்டால் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்து அடியில் புதைந்துள்ள பொருட்களை வைத்து அது கோவில் தான் என்று மதி கெட்ட நீதிபதிகள் கூற மாட்டார்கள் என்று யாரும் உத்தரவாதம் தர முடியாது.

பாபர் மஸ்ஜித் வழக்கில் இப்படித் தீர்ப்பு அளிப்பார்கள் என்பது கூட நாம் எதிர்பார்க்காத ஒன்று தான். ஆனால் நாம் நம்பி ஏமாந்தோம். ஏமாற்றப்பட்டோம்.

காவிகள் திட்டமிட்டு நீதித்துறையில் நிறைந்துள்ளதால் நினைத்தையெல்லாம் தீர்ப்பாக்கும் அக்கிரமங்கள் இனி தொடர்கதையாகி விடக் கூடாது என்பதில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்..

இது உயர் நீதிமன்றத் தீர்ப்பு என்பதால் இதையே முன்மாதிரியாக வைத்து கீழ்க் கோர்ட்டுகள் தீர்ப்பளிக்க சட்டத்தில் இடம் உண்டு. நம்முடைய ஊரில் உள்ள பள்ளிவாசல்களில் பாபர் மஸ்ஜித் பாணியில் கை வைத்து கீழ் கோர்ட்டு நீதிபதிகள் மூலம் நம்முடைய உயிரினும் மேலான பள்ளிவாசல்களை நம்மிடமிருந்து பறிக்கப்படும் அபாயம் காத்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இது கற்பனையோ ஊகமோ அல்ல. காவிக் கும்பல் இப்படித் தான் திட்டம் தீட்டியுள்ளது. “முதலில் அயோத்தி. பின்னர் காசியும் மதுராவும். அதன் பிறகு நாட்டில் உள்ள 3000 பள்ளிவாசல்களை இடிக்க வேண்டியுள்ளது” என்று பகிரங்கமாக அறிவிப்புச் செய்துள்ள நிலையில் நம்முடைய அழுத்தமான –  கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தாக வேண்டும்.

  • முஸ்லிம்களின் எந்தப் பள்ளிவாசலிலும் எவனும் கை வைக்க துணியக் கூடாது என்றால்
  • மதவெறி தலைக்கேறிய நீதிபதிகள் நாம் என்ன சொன்னாலும் அது தான் சட்டம்; அதை யாரும் எதிர்க்க முடியாது என்று பெரும்பான்மைத் திமிரில் இனியும் நடக்கக் கூடாது என்றால்
  • நம்முடைய பள்ளியில் சிலைகளைக் கொண்டு வந்து வைக்க எவனுக்கும் துணிவு ஏற்படக் கூடாது என்றால்
  • நாட்டில் உள்ள அத்தனை பள்ளிவாசல்களையும் பாதுகாக்க வேண்டும் என்றால்

கேடு கெட்ட அலகாபாத் நீதிபதிகளையும், அவர்களின் அயோக்கியத்தனமான தீர்ப்பையும் நாங்கள் காலில் போட்டு மிதிக்கிறோம் என்று நெஞ்சை உயர்த்திச் சொல்வதன் மூலமே சாத்தியமாகும்.

  • அல்லாஹ்வின் ஆலயத்தைக் காக்க எத்தகைய தியாகத்தையும் இந்தச் சமூகம் செய்யத் தயார் என்பதை உலகறியச் செய்ய

ஜனவரி 27 ஆம் தேதி சென்னை / மதுரை உயர் நீதிமன்றத்தின் முன்பாக இலட்சக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் பங்கேற்கும் எழுச்சி மிக்க போராட்டத்துக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பு விடுக்கிறது.

அழைப்பு விடுப்பது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தாக இருந்தாலும் இந்தப் பிரச்சனை தவ்ஹீத் ஜமாஅத்துக்கு மட்டுமான பிரச்சனை அல்ல.

இது நமது ஊர்களில் உள்ள இந்திய நாட்டில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் பிரச்சனையாகும்.

எனவே அநீதியைத் தட்டிக் கேட்கும் இந்த அறப்போராட்டத்தில் தாங்களும் பங்கெடுப்பதுடன் தங்கள் பொறுப்பில் உள்ள பள்ளிவாசல்களில் அறிவிப்பு செய்து இந்த பள்ளிவாசல் பாதுகாப்பு போராட்டத்தில் பங்கெடுக்க ஆர்வமூட்டுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

இடம்:

நாள்:

நேரம்

மேற்கண்ட கடிதத்தை அனைத்து மாவட்ட மற்றும் கிளை சகோதரர்கள் தங்கள் பகுதி ஜமாஅத்தார்களுக்கும் ஊர் தலைவர்களுக்கும் அனுப்பவும்.