ஜனவரி 27 போராட்டம் – காஞ்சி மேற்கு செயல்வீரர்கள் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டத்தின் ஜனவரி 27 பேரணி மற்றும் ஆர்பாட்டதுககான செயல்வீரர்கள் கூட்டம் கடந்த 19-12-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆலந்தூர் நிதி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மேலாண்மை குழு உறுப்பினர் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன், மாநில செயலாளர் கானத்தூர் பஷீர் மற்றும் மாநில மாணவர் அணி பொறுப்பாளர் சகோதரர் அல் அமீன், ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் ஜனவரி 27 க்கு காஞ்சி மேற்கு மாவட்டத்திலிருந்து லட்சக்கணக்கில் மக்களை திரட்டி செல்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.