சோழபுரத்தில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

25022010(015)25022010(006)25022010(012)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்ட சோழபுரம் ரஹ்மானியா தெருவில் கடந்த 25-2-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்கள் மௌலித் கூடுமா கூடாதா ? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் கபீர் அஹ்மது அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் H.சர்புதீன், மாவட்ட மாணவரணி செயலாளர் N.முஹம்மது ஹாரிஸ், கிளைப் பொருளாளர் மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக கிளை து. செயலாளர் அசாருதீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

சோழபுரத்தில் பள்ளி இமாம் ஒருவர் மௌலிது கூடும் என்று மக்களிடம் பரவலாக பிரச்சாரம் செய்து வருகிறார் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.