ரியாத் – நியூ செனைய்யா கிளையில் மார்க்கச் சொற்பொழிவு

கடந்த 05.10.2010 செவ்வாயன்று  இஷா தொழுகைக்குப் பிறகு, ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளையில் மார்க்க விளக்கக் கூட்டம், GGC கேம்ப் வில்லாவில் நடைபெற்றது. மண்டலப் பேச்சாளர் சகோ. இக்பால் மவுலவி அவர்கள், “நன்மைகளை தொடருவோம்” என்ற தலைப்பில் குர்ஆன் – ஹதீஸ் ஒளியில் சிறப்புரை ஆற்றினார்.

அதனை அடுத்து, மண்டலச் செயலாளர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், “சாகடிக்கப்பட்ட நீதி” என்ற தலைப்பில், பாபர் மசூதி தீர்ப்பு குறித்து உரையாற்றினார்.

கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.