பெண்கள் தவ்ஹீத் கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சி

26.09.2010 அன்று சேலம் தவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரியின் வளாகத்தில் 2009-2010 கல்வியாண்டியில் கல்வியை நிறைவு செய்த மாணவிகளுக்கு பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பட்டமளிப்பு நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்ட பொருளாளர் யாசீன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். சேலம் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் ஆண்டறிக்கை கல்லூரியின் முதல்வர் எம்.ஐ.முஹம்மத் சுலைமான் வாசித்தார்.

கல்லூரியில் பட்டபெறும் மாணவிகள் ரிழ்வானா தொழுகையின் முக்கியத்துவம் என்ற தலைப்பிலும் அகீலா, மார்க்கக் கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும் நன்மை ஏவி தீமை தடுப்போம் என்ற தலைப்பில் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்ற மாணவி உரையாற்றினர்.

பின்னர் 2009-2010 கல்வியாண்டில் பயின்ற 41 மாணவிகளுக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் பக்கீர் முஹம்மத் அல்தாஃபி அவர்கள் பட்டங்களை வழங்கி பெற்றோர்களின் கடமையும் பிள்ளைகளின் பொறுப்புகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

முதல் மூன்று இடம்பெற்ற மாணவிகளுக்கு துபை மண்டலம் சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம், ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஸுனன் நஸயீ, ஸுனன் திர்மிதீ மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. பட்டமளிப்பு நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர்.