சேலம் சூரமங்களத்தில் முதல் முறையாக திடலில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை

003002அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்.. முதன் முறையாக சேலம் மாவட்டம் சூரமங்களம் கிளையில் நபிவழித் திடல் தொழுகை!

சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்களம் கிளை சார்பாக தவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரியின் வளாகத்தில் இந்த ஆண்டு முதன் முறையாக ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெற்றது.

இதில் ஏராளமான மக்கள் பயனடைந்தனர். சூரமங்களம் பகுதியைச் சார்ந்த பெண்களும் திரளாக வந்திருந்தனர். இதில் செங்கல்பட்டைச் சார்ந்த பேச்சாளர் உஸ்மான் அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்.

கிளை நிர்வாகிகளான கிளைத் தலைவர்-துல்கர்ணைன், கிளை செயலாளர்-ஆரிஸ் கான், பொருளாளர்-சுபைர் மற்றும் துணை நிர்வாகிகளான உபைதுல்லாஹ், ஸானவாஸ், அனீஸ், சலாமுத்தீன் மற்றும் தாவா சென்டர் மாணவர்கள் போன்றோர் பெருநாள் திடலுக்கான ஏற்பாட்டை செய்திருந்தனர்.