சேலத்தில் நேற்று கூடிய TNTJ வின் மாநிலச் செயற்குழு!

dsc00354dsc003171dsc00350dsc00340dsc00316தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயற்குழு நேற்று (1-11-2009) சேலத்தில் கூடியது. டிசம்பர் 6 குறித்து இச் செயற்குழுவில் ஆலோசிக்கப்பட்டது! இறுதியில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பபட்டது!

தீர்மானங்கள்

1. மதசார்பற்ற இந்தியாவில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலம் பாபர் மசூதி 1992 ஆண்டு டிசம்பர் 6ஆம் நாள் காங்கிரஸ் ஆட்சியில் அநியாயமாக இடிக்கப்பட்டது. இது உலக மக்கள் அறிந்த உண்மையாகும். அப்போது ஆட்சியில் இருந்த நரசிம்மராவ், பாபர் மசூதியை இடித்த அதே இடத்தில் அப்பள்ளியை கட்டித்தருவதாக வாக்குறுதியளித்தார். மேலும் பாபர் மசூதியை இடித்ததற்கு காங்கிரஸ் கட்சியின் தற்போதைய dsc00299dsc00313தலைவி சோனியாகாந்தி வருத்தம் தெரிவித்தார்.

சோனியாகாந்தியின் வாக்குறுதியை நம்பிய முஸ்லிம்கள் தங்கள் வாக்குகளை அளித்து காங்கிரஸை ஆட்சியில் அமர்த்தினர். ஆட்சியில் அமர்ந்த காங்கிரஸ் அரசு இதுவரை பாபர் மசூதி கட்டுவது குறித்து வாய்திறக்காமல் இருப்பதை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

மேலும் பாபர் மசூதி இருந்த அதே இடத்தில் பள்ளிவாசலைகட்டித்தர வலியுறுத்தியும் பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வலியுறுத்தியும் வருகின்ற டிசம்பர் 6ஆம் நாள் தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பேரணி & ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

dsc003142. தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்ட 3.5 சதவிகித இடஒதுக்கீட்டில் தொடர்ந்து குளறுபடிகள் நீடித்து வருகின்றன. இதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து அரசுக்கு சுட்டிக் காட்டியும் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இதுவரை தமிழக முதல்வர் இவ்விஷயத்தில் உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக முதல்வரின் இந்த மெத்தனப்போக்கை இச்செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு உடனடியாக இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறது.

3. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் முஸ்லிம்களின் பெருவாரியான வாக்குகளைப் பெற்று ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு, கடந்த தேர்தலின் போது வாக்குறுதி அளித்து ஏமாற்றியது போல் இம்முறையும் ஏமாற்றாமல் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முஸ்லிகளின் விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீட்டை விரைவில் வழங்கிட வழிவகை செய்யுமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

4. அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் எல்லா வகைளிலும் பின்தங்கியுள்ளதை ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் நீதிபதி ராஜேந்தர் சர்சார் கமிட்டியும் மற்றும் பல்வேறு அமைப்புகளும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்ததின் அடிப்படையில் குறைந்தபட்சம் முஸ்லிம்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவிடும் அனைத்து வகையில் மத்திய அரசு முயற்சி எடுத்து முஸ்லிம்களுக்கு வட்டியில்லா கடனுதவி வழங்குமாறு இச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

5. பெண்களின் கண்ணியத்தையும் கற்பு நெறியையும் காப்பதற்கு பர்தா எனும் கண்ணியமிகு ஆடையை இஸ்லாம் அளித்திருக்கிறது. இதை இழிவுபடுத்தும் வகையில் சின்னத்திரை, பெரிய திரை நடிகைகளையும் தாசிகளையும் பர்தாவை அணிவித்து நீதிமன்றங்களுக்கு காவல்துறை அழைத்து வருவதை வன்மையாக கண்டிக்கிறது. இவ்வழக்கத்தை உடனடியாக கைவிடும்படி காவல்துறையை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

6. தொடர்ந்து முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் பிரிவினைவாதிகளாகவும் திரைப்படங்களில் சித்தரித்து வருகின்ற இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களை இச்செயற்குழு வன் மையாக கண்டிக்கிறது.

7. நாமக்கலில் வரதட்சணை மற்றும் சமூக சீர்கேடுகளைகளையும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடத்த அனுமதி கோரும் பொதுக்கூட்டங்களுக்கு காவல்துறை தொடர்ந்து அனு மதி மறுத்துவருகிறது. பேச்சுரிமையை பறிக்கும் காவல்துறையின் இந்த ஜனநாயக படுகொலைப் போக்கை தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு ஜனநாயக உரிமை மீட்டுத் தருமாறு இச்செயற் குழு கேட்டுக் கொள்கிறது.

8. நாட்டில் எங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் முஸ்லிம்களோடு முடிச்சுப்போடும் முட்டாள்தனத்திற்கு முடிவுகட்டும் வகையில் மாலேகான் குண்டு வெடிப்பிற்கும் அதில் பழியான ஏராளமான அப்பாவி மக்களின் உயிரிழப்பிற்கும் பாசிச இந்துத்துவா அமைப்புகள்தான் காரணம் என்ற உண்மை வெளிப்பட்டது. மாலேகானைத் தொடர்ந்து கோவா குண்டுவெடிப்பிலும் இந்த பாசிச கும்பலின் சதி வெளியானது. நாட்டின் அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் உலை வைக்கின்ற இந்த பாசிச சக்திகளை சட் டத்திற்கு முன்னிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டுமென்று மத்திய மாநில அரசுகளை இச்செயற்குழு வலியுறுத்துகிறது. வெடிகுண்டு கலாச்சாரம் இஸ்லாமிய கலச்சாரம்போல் சித்தரிப்பதை அரசுகளும் ஊடகங்களும் நிறுத்திக் கொள்ள வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

9. கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டு பலரும் விடுதலையாகி உள்ள நிலையில் வெடிக்காத குண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குணங்குடி ஹனீஃபா பலவருடங்களாக விசாரணை கைதியாகவே இருக்கிறார். அவரை ஜாமீனிலாவது விடுதலை செய்ய வேண்டு மென்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. பத்தாண்டுகளுக்கும் மேலாக விசாரணைக் கைதிகளாக, முஸ்லிகள் என்ற ஒரே காரணத்தால் சிறையில் வாடிக் கொண்டிருக்கின்ற இஸ்லாமியர்களை உடனடியாக விடுதலை செய்யும்படி இச்செயற்குழுக் கேட்டுக் கொள்கிறது.