சேலத்தில் நடைபெற்ற பெண்களுக்கான ஒரு நாள் இஜ்திமா

சேலத்தில் நடைபெற்ற பெண்களுக்கான ஒரு நாள் இஜ்திமாசேலத்தில் நடைபெற்ற பெண்களுக்கான ஒரு நாள் இஜ்திமாதமிழ்நாடு நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக மாபெரும் ஒரு நாள் பெண்கள் மார்க்க
விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி 23.08.09 அன்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை
சேலம் கோட்டை ஸ்டோக்ஸ் ஹாலில் நடைபெற்றது.

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நேரடி நிர்வாகத்தில் நடைபெறும் சேலம் தவ்ஹீத் பெண்கள் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் சேலம் பச்சப்பட்டி தவ்ஹீத் மதரஸா ஆசிரியை, மாணவிகள் இணைந்து இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக நடத்தினார்கள்.

குறிப்பாக ஜனாஸா குளிப்பாட்டுதல் செய்முறை விளக்கம் சேலம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.