செய்துங்கநல்லூர் இரயில் நிலையத்திற்கு முன்பதிவு கோட்டாவை குறைத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

செய்துங்கநல்லூர் இரயில் நிலையத்திற்கு முன்பதிவு கோட்டாவை குறைத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்!தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் இரயில் நிலையத்திற்கு பத்து முன்பதிவு கோட்டா செந்தூர் இரயிலுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதை திடீர் என்று 6 ஆக குறைத்து விட்டனர். இதனால் செய்துங்கநல்லூர் பகுதியில் வசிப்பவர்கள் வெளியூர்களுக்கு செல்ல முன்பு செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். குறைந்த அளவே முன்பதிவு செய்ய முடிகின்றது. எனவே செய்துங்கநல்லூருக்கு முன்புதிவு கோட்டாவை குறைத்ததை கண்டித்தும். அதை மீண்டும் வழங்கக் கோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.