சென்னை புத்தக கண்காட்சியில் தவ்ஹீத் ஜமாஅத் செய்து வரும் தஃவா பணி

DSC00547DSC00568

DSC00564DSC00558

DSC00571DSC00579DSC00575DSC00569DSC00561DSC0053933 சென்னை புத்தக கண்காட்சி பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளி வளாகத்தில் சுமார் 1 ½ லட்சம் சதுர அடி இடத்தில் கடந்த 30-12-2009 ஆம் அன்று துவங்கி தற்போது நடைபெற்று வருகின்றது. இக்கண்காட்சியில் சுமார் 360 நிறுவனங்கள் 606 அரங்குகளில் நூல்களை காட்சிக்கும் விறபனைக்கும் வைத்துள்ளது.

இதில் நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடை எண் 275 இல் அரங்கம் அமைத்து இஸ்லாமிய புத்தகங்களை சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

சிந்திப்பதிலும் படிப்பதிலும் ஆர்வம்  உள்ளவர்கள் மட்டுமே கூடும் இடமாக இந்த புத்த கண்காட்சி அமைந்துள்ளதால் இங்கு தஃவா செய்தால் அது பலரையும் சென்றடையும் என கருதி தவ்ஹீத் ஜமாஅத் புத்தக கண்காட்சியில் அரங்கம் அமைத்து ஆயிரக்கணக்கானோரிடையே சிறப்பான முறையில் தஃவா பணி செய்து வருகின்றது.

இந்த அரங்கத்தில் இஸ்லாம் குறித்த இலவச கையேடுகள் வழங்கப்படுகின்றது. பலரும் ஆர்வத்துடன் அரங்கிற்கு வந்து இஸ்லாம் குறித்த விளக்கங்களை கேட்டுச் செல்கின்றனர். அரங்களில் உள்ள நமது சகோதரர்கள் சிறந்த முறையில் பிறசமய மக்களிடம் தஃவா செய்து வருகின்னர்.

இந்த அரங்களில் பி.ஜே உள்ளிட்ட அறிஞர்கள் எழுதிய புத்தகங்கள், குர்ஆன் தமிழாக்கம் தமிழ் குர்ஆன் சஃப்ட்வேர், போன்ற அனைத்தும் சலுகை விலையில் விற்கப்படுகின்றது. உதாரணமாக 300 ரூபாய் மதிப்புள்ள குர்ஆன் தமிழாக்கம் 150 க்கு விற்கப்படுகின்றது(பிறசமயத்தை சார்ந்தவர்களுக்கு).

குறிப்பு:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கென்று ஒரு ஸ்டால் பெறுவதற்கு முயற்சி செய்த பொழுது அனைத்து ஸ்டால்களும் முடிந்து விட்டது என்று நிர்வாகம் கூறிவிட்டதால், வேறு வழியின்றி மூன் பப்ளிகேசனுக்காக ஒப்பந்தம் செய்திருந்ததை நமக்காக விட்டுக் கொடுக்குமாறு, மூன் பப்ளிகேசன் நிர்வாகத்திடம் நாம் வேண்டிக் கேட்டுக்கொண்டதற்கினங்க அவர்களது ஸ்டாலை நமது ஜமாஅத்திற்காக விட்டுத்தந்துள்ளார்கள். ஒப்பந்தம்; நமது பெயரில் இல்லாமையால், மூன் பெயரில் மட்டுமே ஸ்டாலின் பெயர் உள்ளது என்பதுடன், ஸ்டாலின் பெயரும் புத்தகக் கண்காட்சி நிர்வாகமே ஸ்டாலின் மீது பொருத்தியுள்ளார்கள் என்ற தகவலையும் இணையதள நேயர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.