சென்னையில் நடந்த மிஸ்ரா அறிக்கை பயிற்சி முகாம்

ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை பற்றிய முழு ஆய்வு, அறிக்கையின் பரிந்துரைகள் ஆகியவற்றை நம் சமுதாயத்திற்கு விளக்கும் வண்ணமாக, TNTJ மாநில தலைமையகத்தில் கடந்த ஞாயிறு கிழைமை காலை 10 மணிக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மாநில மாணவரணிச் செயலாளர் S.சித்திக் அவர்கள் ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை குறித்தும், இந்திய அளவில் முஸ்லிம்கள் எவ்வாறு பின் தங்கி உள்ளனர் என்பது குறித்தும், ஆதாரங்களோடு விளக்கினார்.

மேலும் மத்திய அரசில் நமக்கு 10% இட ஒதுக்கீடு கிடைத்தால் எந்த எந்த துறைகளில் நமக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும், இதனால் நமது சமுதாயத்திற்க்கு ஏற்படும் நன்மைகள் பற்றியும் விளக்கினார். மேலும் ஜூலை-4 மாநாட்டிற்க்கு மக்களை எவ்வாறு அழைக்க வேண்டும் எனபது பற்றியும் விரிவாக விளக்கி கூறினார்.

பின்னர் பேசிய மாநில மாணவரணி துனை செயலாளர் N.அல் அமீன் சச்சார் அறிக்கையின் முக்கிய அம்சங்களை விளக்கினார். இறுதியில் கேள்வி பதில் நிகழ்சியும் நடைபெற்றது.