செங்கோட்டையில் நடைபெற்ற தர்பியா முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் செங்கோட்டை கிளையின் சார்பாக 28.03.2010 ஞாயிறு அன்று தர்பியா நடைபெற்றது. இந்த தர்பியா வகுப்பு செங்கோட்டை அருகிலுள்ள பனிச்சி என்ற இயற்கைச் சூழல் நிறைந்த இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த தர்பியா வகுப்பில் இஸ்லாமியக் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர் மைனுத்தீன் எம்.ஐ. எஸ்,ஸி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதில் செங்கோட்டை நகர நிர்வாகிகள் அமீர், வஹாப் மற்றும் பல சகோதரர்கள் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். ஏராளமான சகோதரர்கள் இதில் கலந்து பயனடைந்தனர்.