சுவாமிமலை கிளையில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி

28022010(016)28022010(012)28022010(023)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சுவாமிமலை கிளையில் கடந்த 28.02.10 ஞாயிற்றுக்கிழமை அன்று M.L.A.ப்ரைமரி ஸ்கூலில் பெண்களுக்கான மார்க்க விளக்கக் கூட்டம் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் S.காதர் மைதீன் அவர்கள் தலைமை தாங்கினார். சகோதரி:A.நஜ்முன்னிசா ஆலிமா அவர்கள் மௌலீதும் மீலாது விழாவும் நபி வழியா? என்ற தலைப்பிலும் சகோதரி:A.சபுர் நிசா ஆலிமா (தலைமை ஆசிரியை) அவர்கள் இஸ்லாத்தில் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியாக சகோதரி: நஸ்ரின் பானு ஆலிமா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.