சுவாமிமலையில் ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சுவாமிமலை கிளையில் கடந்த 08.01.11 சனிக்கிழமை அன்று சுவாமிமலை MLA மெட்ரிகுலேசன் ஸ்கூலில் ஜனாஸா குளிப்பாட்டும் செய்முறை விளக்க பயிற்சி முகாம் நடைப்பெற்றது.

இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் மற்றும் ஆசிரியைகள் செய்முறை விளக்க பயிற்சி அளித்தார்கள். சகோதரி சபுர் நிசா ஆலிமா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.