சுல்தான் பேட்டையில் நடைபெற்ற தர்பியா முகாம்

dsc06952அஸ்ஸலாமு அலைக்கும், கடந்த 4.10.2009(ஞாயிற்றுக் கிழமை) காலை 10.00 மணிமுதல் மாலை 4.00 மணி வரை புதுச்சேரி , சுல்தான் பேட்டை TNTJ கிளையின் சார்பாக சுல்தான் பேட்டை TNTJ மர்க்கஸில் தர்பியா முகாம் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் அஹமதுல்லாஹ் தலைமை தாங்கினார். சகோதரர். அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் கலந்து கொண்டு தொழுகை பயிற்சி, மற்றும் இஸ்லாம் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

மாநில செயலாளர். ஜின்னா மற்றும் புதுச்சேரி மாவட்;ட நிர்வாகிகள் , TNTJ உறுப்பினர்கள், கிளை நிர்வாகிகள், மற்றும் ஏரளமான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து பயனடைந்தனர்.

இறுதியாக கிளை செயலாளர் நிஜாமுதீன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.