சுல்தான்பேட்டை பேட்டையில் கல்வி கருத்தரங்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான “கல்வி கருத்தரங்கம்” நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோ.ஹாஜா முஹைதீன் (கிளை மாணவரணி செயலாளர்) வரவேற்புரை நிகழ்த்தினார். சகோ.ஷமீம்  அவர்கள் “தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சகோ.கலீலுர்ரஹ்மான் அவர்கள் மாணவர்களின் படிப்பு, வேலை சம்மந்தமான கேள்விக்கு பதில் அளித்தார்கள்.

பின்னர் மாநிலச் செயலாளர் சகோ.ஜின்னா பாய்  அவர்கள் “செல்போனில் சீரழியும் மாணவ,மாணவிகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியில் சகோ.இலாஹி (கிளை மாணவரணி செயலாளர்) அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.இதில் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.