சுற்றறிக்கைகள் வெளியிடுவது குறித்த முக்கிய அறிவிப்பு

அன்புக்குரிய மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகிகளுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்

மாநிலத் தலைமையகத்தின் முக்கிய அறிவிப்புகளை தேவைக்கேற்ப சுற்றறிக்கைகளாக நாம் வெளியிட்டு வருகின்றோம்.

இந்த சுற்றறிக்கைகளை சில மாவட்ட மண்டல நிர்வாகிகள் கவனிக்காத நிலை ஏற்படுகின்றது.

இதனால் தகவல் தொடர்பு பரிமாற்றத்தில் தேக்க நிலை ஏற்படுவதை கவனத்தில் கொண்டும், சுற்றறிக்கைகள் மூலமாக மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகிகளுக்கு தெரிய வேண்டிய செய்திகள் முழுமையாக சென்றடைய ஏதுவாகவும், சுற்றறிக்கைகள் வெளியிடும் நேரத்தை முறைப்படுத்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் இனி வரக்கூடிய காலங்களில் இன்றைய (02.11.17 வியாழக்கிழமை) இந்த அறிவிப்பு வெளியிட்ட இந்த நேரத்திற்கு பின்பு ஏதேனும் சுற்றறிக்கை வெளியிடுவதாக இருந்தால் அவ்வாறு வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் எதுவாக இருந்தாலும் அவைகள் மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகத்திற்கான சுற்றறிக்கை குறித்த வாட்ஸ் அப் குரூப்பில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கும், இரவு 9.30மணிக்கும் வெளியிடப்படும் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

இவ்விரண்டு நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் சுற்றறிக்கைகள் வெளியிடப்படாது.

நாம் வெளியிடும் சுற்றறிக்கையானது
பொது மக்களுக்கும் அறிவிப்புச் செய்யும் அறிக்கைகளாக இருந்தால் அவை மட்டும் தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் சுற்றறிக்கை குரூப்பில் நாம் வெளியிட்ட அரை மணி நேரத்திற்குப் பிறகு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்படும்.

அதாவது காலை 10 மணிக்கும் இரவு 10 மணிக்கும் மாநில நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கப்படும் அறிக்கைகள் நமது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்படும்.

எனவே மாவட்ட மற்றும் மண்டல சுற்றறிக்கை குரூப்பில் இருக்கும் மாவட்ட மண்டல நிர்வாகிகள் காலை 9.30மணிக்கும் இரவு 9.30மணிக்கும் இதை கண்காணித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

குறிப்பு:
இன்று (02.11.17 வியாழக்கிழமை) இரவு 9.30மணிக்கு சில முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இப்படிக்கு,
எம்.எஸ்.சையது இப்ராஹீம்
பொதுச் செயலாளர்