சுகுணாபுரம் கிளையில் ஏழை சகோதரிக்கு வீடு கட்டி கொடுத்து உதவி

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் கோவை மாவட்டம் சுகுணாபுரம் பகுதியை சேர்ந்த இஸ்லாமிய சகோதரர் நோய்வாய்பட்டு இறந்தார்.அவருடைய மனைவி,மூன்று குழந்தைகளை கூட்டிக் கொண்டு தனது சகோதரன் வீட்டில் வசித்து வந்தார். பிறகு  தங்குவதற்கு இடம் இல்லாமல் போனதும் சுகுணாபுரம் கிளையை அணுகினார்.

அரசாங்கத்திடம் இருந்து பெற்ற காலி இடத்தில் ரூபாய் 1,05,000 செலவு செய்து வசிப்பதற்கு ஏற்ற அளவில் வீடு தாயார் செய்து வழங்கப்பட்டது.

கிளை சகோதரர்கள்  வசூல் செய்த தொகை Rs 80,000  மாநிலத் தலைமை ஜகாத் தொகையிலிருந்து தந்த 25,000 ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.