சீர்காழியில் நடைபெற்ற நாகை வடக்கு மாவட்டப் பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்ட பொதுக் குழு சீர்காழி வெண்ணிலா திருமண மஹாலில் 14.03.2010 ஞாயிற்றுக் கிழமை அன்று மாநில பொது செயலாளர் M.அப்துல் ஹமீது அவர்களின் தலைமையிலும் மாநில துனை தலைவர் கோவை R.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் முன்னிலையிலும் காலை 10.30, மணியளவில் நடைபெற்றது.

சிறப்பாக செயல்பட ஆலோசனை வழங்கபட்டது.

மேலும் மாவட்ட துனை செயலாளர்,Y.A.S.சாதிக் வெளிநாடு செல்வதால் அப்பொறுப்பிற்க்கு பெரியகூத்தூர் ஜமால் அவர்களையும் பொறையார் தமீம் அவர்களையும் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் தேர்வு செய்தனர்.

மதியம் ஒரு மணிக்கு பத்திரிக்கையாலர் சந்திப்பு நடைபெற்றது. முக்கிய பத்திரிக்கைகள் மற்றும் முண்ணனி தொலைகாட்சிகலிள் இருந்தும் செய்தியாளர்கள் வந்து இருந்தனர். மாலை மூன்று மணிக்கு பொதுக் குழு துவாவுடன் நிறைவு அடைந்தது அல்ஹம்துலிலாஹ்.