சீர்காழியில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் சீர்காழி நகரத்தில் கடந்த  14.03.2010 ஞாயிற்றுக் கிழமை அன்று வெண்ணிலா திருமண மஹாலில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது .

மாவட்ட தலைவர் H.M.புஹாரி துவக்க உரையுடன் துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் மாநில துனை தலைவர் கோவை R.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் மார்க்க சம்மந்தமான அனைத்து கேள்விகளுக்கும் மிகச் சிறப்பான முறையில் பதில் அளித்தார்.

இந்தநிகழ்ச்சிக்கு முன்பாக வந்திருந்த பொது மக்களிடம் இந்தநிகழ்ச்சி குறித்து  கருத்து கூற குறிப்பு சீட்டு வழங்கபட்டது .வந்திருந்த அனைவரும் மிக ஆர்வத்துடன் கேள்வி கேட்டதோடு மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்த வேண்டுமென கருத்து கூறி இருந்தனர்.