சிறுவர் இல்லத்தில் புதிய சேர்க்கை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகம் பெற்றோர்களால் கைவிடப்பட்டுத் திக்கற்று நிற்கும் ஆண் குழந்தைகளுக்காகத் தஞ்சை மாவட்டம் சுவாமிமலையிலும் சிவகங்கை இளையாங்குடியிலும் சிறுவர் ஆதரவு இல்லங்களை நடத்தி வருகின்றது.

இதில் 110 க்கும் அதிகமான ஆதரவற்ற சிறுவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

தற்போது இரண்டு இல்லங்களின் உள்கட்டமைப்பில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்திய அடிப்படையில் இன்னும் கூடுதலான சிறுவர்களைச் சேர்க்க இயலும் என்பதால் ஆதரவற்ற சிறுவர்களை இரண்டு இல்லங்களிலும் சேர்ப்பதற்கான அட்மிஷன் நடைபெறுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தங்களுக்குத் தெரிந்த ஆதரவற்ற சிறுவர்களைத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறுவர் இல்லத்தில் சேர்த்துப் பயன்பெறுங்கள்.

வயது வரம்பு 10 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தந்தை இறந்திருந்தாலோ அல்லது தந்தை இருந்தும் உரிய ஆதரவு கிடைக்காமல் இருந்தாலோ அத்தகைய சிறுவர்கள் நமது இல்லத்தில் சேர்க்கப்படுவார்கள்.

புதிய சேர்க்கை அதிகமானால் முந்தியவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

தொடர்புக்கு: 99520 35171

இப்படிக்கு
M.S. சையது இப்ராஹீம்
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்