சித்த மருத்துவக்கல்வி படிப்பு விண்ணப்பம் வழங்கல் துவக்கம்: தேர்வுக்குழு செயலர் அப்துல்காதர் தகவல்.

sithaசென்னை அண்ணாநகர் அரசு சித்த மருத்துவக்கல்லூரியில், சித்தா, ஆயுர்வேதா,
யுனானி, ஓமியோபதி மற்றும் நேச்சுரோபதி ஆகிய ஆறு படிப்புகளுக்கான
விண்ணப்பங்கள் வழங்கும் பணிகள் நேற்று (13/07/09) துவங்கப் பட்டன.கல்லூரி
முதல்வர் மற்றும் தேர்வுக்குழு செயலர் அப்துல்காதர் மாணவர்களுக்கு
விண்ணப் பங்களை வழங்கினார்.

சித்த மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் குறித்து அப்துல்காதர்
கூறியதாவது: விண்ணப்பங்கள் 13/07/09 இருந்து வினியோகம் செய்கிறோம். ஒரு
விண்ணப் பத்தின் விலை 500 ரூபாய்.

வரும் ஆகஸ்ட் 3ம் தேதி வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய
கடைசி தேதி ஆகஸ்ட் 5ம் தேதி.ஆகஸ்ட் 19ம் தேதி கவுன்சிலிங் நடக்கிறது.
நேற்று ஒருநாளில் மட்டும் 60 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

முதல் நாளில், குறைந் தளவே மாணவர்கள் வந்திருந்தனர். ஐ.டி., நிறுவனங்களின்
வீழ்ச்சியினால் மாணவர்கள், சித்த மருத்துவக்கல்வியில் சேர்வதற்கு அதிக
ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால், இனிவரும் நாட்களில் விண் ணப்பங்களின்
விற்பனை பலமடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு செயலர்
அப்துல்காதர் கூறினார்.