சிக்கல்நாயக்கன் பேட்டையில் நடைபெற்ற இரத்த தான முகாம்

PICT0494PICT0448தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சிக்கல்நாயக்கன்பேட்டை கிளையில் நேற்று (26.01.10) குடியரசு தினத்தன்று இரத்ததான முகாம் நடைப்பெற்றது.

இதில் மாவட்ட துணைத் தலைவர் B.இம்தியாஸ் அவர்கள் தலைமை தாங்கினார்.

அக்பர் அலி மா.துணைச் செயலாளர், காட்டூர் சாதிக் மா.துணைச் செயலாளர், ரசூல் அல்ஹாஜ் கிளைத் தலைவர், பயாஸ் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சகோ. தாரிக் கிளைப் பொருளாளர் நன்றியுரை நிகழ்த்தினார். இம்முகாமில் ஆண்கள், பெண்கள் பிற மத சகோதர, சகோதரிகள் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என 56 பேர் இரத்தம் கொடுத்தனர்.