சாக்கடையினால் அவதிப்படும் பள்ளி மாணவர்கள்: புகார் கொடுத்த திருச்சி TNTJ

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் , தெற்கு உக்கடை பகுதியில் உள்ள பள்ளிக்கூடத் தெருவில் கழிவுநீர் செல்லும் சாக்கடை  ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் நுழைவுவாயில் அருகே செல்கிறது.

சாக்கடையில் செல்லும் கழிவுநீர் சரிவர ஓடாததால், கழிவுநீர் தேங்கி பள்ளிக்கூடத்திற்கு செல்லும் குழந்தைகள் அக்கழிவுநீரை மிதித்தே செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பள்ளிக்கூடத் தெருவையும், பள்ளிவாசல் தெருவையும் இணைக்கும் பாதையில் உள்ள சாக்கடையும் உடைந்து, கழிவுநீர் தேங்கியும் , பள்ளிக்கூடத்தின் பின் வாசலின் அருகாமையில் குப்பைதொட்டி உள்ளதால் அக்குப்பை அந்த இடம் முழுவதும் பரவி அக்குப்பையையும், தேங்கிய கழிவுநீரையும் மிதித்த வண்ணமே பள்ளிக்கூடத்தின் பின் வாசல் வழியாகவும் குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.

இதனால் குழந்தைகளுக்கு அடிக்கடி காயிச்சல், வாந்திபேதி போன்ற கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு மிகவும சிரமப்பட்டு வருகின்றனர்.

ஆகவே, பள்ளிக்கூடத்திற்கு அருகில் உள்ள உடைந்த சாக்கடையை கட்டிதந்தும்,
கழிவுநீர் தேங்காத வண்ணமாறு அமைத்தும்,
பள்ளிக்கூடத்திற்கு அருகில் உள்ள சாக்கடைகளை சிலாப்புகளை கொண்டு மூடியும்,
பள்ளிக்கூடத்தின் பின் வாசலின் அருகில் உள்ள குப்பைதொட்டியை விரைவில் அகற்றியும்,
பன்றி பிரச்சினையை முழுவதும் ஒழித்தும்,

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என  திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்தும், மேயர், மற்றும் துணை மேயரிடமும் முறையாக அரியமங்கலம் TNTJ யினர் பொதுமக்களின் கையெழுத்துடன் கூடிய புகார் மனுவை கொடுத்தனர்.

அவர்கள் விரைவில் தீர்வு கண்டு தருவதாக வாக்குறுதி அளித்தனர். அவர்கள் உடன் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்ஷா அல்லாஹ் அடுத்த கட்ட நடவடிக்கையில் அரியமங்கம் TNTJ இறங்கும்.