சர்வர் ஹார்ட்வேர் கோலாறு: 4 நாளில் மீண்டும் புதிதாக வடிவமைக்கப்பட்ட TNTJ.net இணையதளம்!

கடந்த 28 ஆம் தேதி நமது விபிஎஸ் சர்வரின் ஹார்ட்வேரில் எதிர்பாராத விதமாக கோலாறு ஏற்பட்டது. இதனால் www.tntj.net கிடைப்பதில் தடங்கள் ஏற்பட ஆரம்பித்தது. பின்னர் ஹார்ட்வேர் சரி செய்யப்பட்டது. இருப்பினும் இந்த ஹார்ட்வேர் ஃபெயிலியர் காரணமாக சர்வரில் இருந்த நமது தகவல்களோடு சேர்த்து அனைத்து தகவல்களும் அழிந்து வி்ட்டதாகவும் பேக்கப் சர்வரில் இருந்து அனைவரது டேட்டாக்களையும் மீட்க முயற்சி செய்து வருவதாகவும் சர்வர் நிர்வாகம் நமக்கு தெரிவித்தது.

இறுதியில் பேக்கம் சர்வரிலும் அதே பிரச்சனையின் காரணமாக அனைத்து டேட்டாக்கலும் அழிந்து விட்டதாக கூறி உங்களிடம் இருக்கும் டேட்டாவைத் தான் பயன்படுத்த வேண்டும் எங்களால் அழிந்து போன டேட்டாக்களை தற்சயம் மீட்க முடியவில்லை என சர்வர் நிர்வாகம் தனது இயலாமையை வறுத்தத்துடன் கடந்த 29 அன்று நமக்கு தெரிவித்தது.

அன்றிலிருந்து இரவு பகல் பாராமல் www.tntj.net இணையதளத்தின் இன்றய தேதி வரை உள்ள அனைத்து டேட்டாக்களையும் ஒன்று சேர்த்து  மீண்டும் இணையதளம் புதிதாக வடிவமைக்கப்பட்டு இறைவனது கிருபையால் இன்று (1-9-2010) வெளியாகியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

சர்வரில் ஏற்பட்ட இந்த கோலாறுக்கு சர்வர் நிர்வாகம் பொறுப்பேற்று அடுத்துள்ள 3 மாதத்திற்குண்டான tntj.net சர்வர் கட்டணத்தை ரத்து செய்து 3 மாதத்திற்கு எந்த கட்டனமும் செலுத்தத் தேவையில்லை எனக் கூறியிருப்பது குறிப்பிடதக்கது.

கடந்த 7 மற்றும் 8 மாதத்திற்குரிய செய்திகள் இன்னும் அப்டேட் செய்யப்படவில்லை இன்ஷா அல்லாஹ் ஒவ்வொன்றாக சேர்க்கப்படும்.

மேலும் தவ்ஹீத் மேட்ரிமோனில் மற்றும் வேலை வாய்ப்பு பகுதியும் விரைவில் சேர்க்கப்படும் இன்ஷா அல்லாஹ்!

செய்திகள் ஏதேனும் விடுபட்டிருப்பது நேயர்களின் பார்வைக்கு வருமேயானால் தயவு செய்து இணையதளத்திற்கு தெரிப்படுத்தவும்.

நேயர்களின் ஆதரவிற்கு நன்றி ஜஸாகல்லாஹ்!..

-வெப்மாஸ்டர்