சம்ஜாதா ரயில் குண்டுவெடிப்பை நடத்திய இந்து தீவிரவாதிகள் – விசாரனையில் கண்டுபிடிப்பு!

2007ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி நள்ளிரவில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் சென்று கொண்டிருந்த சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு பெட்டிகளில் குண்டுகள் வெடித்தன. இதில் 68 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானியர்கள். இவர்களில் 38 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். லாகூருக்கு சென்று கொண்டிருந்தவர்கள் இவர்கள். மொத்தம் 6 பெட்டிகளில் குண்டுகள் வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. ஆரம்பத்தில் இது பாக்கிஸ்தான் சதி என மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் இப்போது இது இந்து தீவிரவாதிகளில் கோர தாக்குதல் என தெரியவதுள்ளது.

ஹைதராபாத்தின் மெக்கா வசூதியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய சாமியார் அசிமானந்த்துக்கு, 68 பேரைர் பலிகொண்ட சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்திலும் தொடர்பு உள்ளதாக தேசிய புலனாய்வு ஏஜென்சியின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மெக்கா மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு குண்டுவெடித்தது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் இந்து தீவிரவாதிகள் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த நிலையில் நவம்பர் 19ம் தேதி 59 வயதாகும் அசிமானந்த்தை ஹரித்வாரில் வைத்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மெக்கா மசூதி குண்டுவெடிப்பில் தனக்குள்ள தொடர்பை அவர் ஒத்துக் கொண்டார். மேலும் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பில் உள்ள தொடர்பையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார் என்று தேசிய புலனாய்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் சம்ஜாதா குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வரும் சிறப்பு கோர்ட்டான பன்ச்குலா கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், சாமியாருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் எங்களுக்கு உள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தனக்கு உள்ள தொடர்பையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து ஜனவரி 3ம் தேதி வரை தொடர்ந்து காவலில் வைத்து விசாரிக்க தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு கோர்ட் அனுமதி அளித்தது.

-தேடித்தந்தவர் S.சித்தீக்.M.Tech