சமஸ்பிரான் கிளையில் ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் மதிப்பில் புத்தாடைகள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சமஸ்பிரான் கிளை சார்பாக வருடம் தோறும் ஏழை மக்களுக்கு ரமளான் மாதத்தில் புத்தாடைகள் இலவசமாக வழங்கப்படும். இந்த ஆண்டு  இன்று (19-8-2011) ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள சர்ட்,பேண்ட்,கைலி ,சேலைகள் ஏழை குடும்பங்களுக்கு நோன்பு பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழங்கப்பட்டது. ஏழை குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் இதை பெற்று சென்றனர். அல்ஹம்துலில்லாஹ்!