சன்னாபுரத்தில் மாணவர்களுக்கு மார்க்க அறிவுப்போட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சன்னாபுரம் கிளையில் கடந்த 01.06.10 செவ்வாய்க்கிழமை அன்று மாணவ, மாணவிகளுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் அபுல்ஹசன் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் இப்ராஹீம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாவட்ட பேச்சாளர் சலீம், கிளை செயலாளர் நூருல் ஹசன் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியாக கிளை துணை செயலாளர் அப்துல் நாசர் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

இதில் இருபத்தி ஐந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றனர்.