”சத்தியத்தை சொல்லி அசத்தியத்தை வெல்வோம்” கடையநல்லூர் பொதுக் கூட்டம் !

sfsd

2நெல்லை மாவட்டம் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் காயிதேமில்லத் திடலில் மார்க்க விளக்க பொதுக்கூட்டமும் அரபி கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்க்கு ரஹ்மானியாபுரம் கிளை தலைவர் அல் அமீன் தலைமை தாங்கினார்கள். மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் முஹம்மது தாஹா அவர்கள் தீன்குலம்பெண்மணி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள. தொடர்ந்து மாநில மேலாண்மை குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் அரபி கல்லூரி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சத்தியத்தை சொல்லி அசத்தியத்தை வெல்வோம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் ஆண்களும், பெண்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.