கோவை TNTJ வின் இரத்த தான சேவையை பாராட்டி 3 விருதுகள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கோவை மாவட்டத்தின் இரத்ததான சேவையை பாராட்டி தமிழக அரசின் சார்பாக, கோவை மாவட்ட கலெக்டர் உமாநாத் அவர்கள் நேற்று (5-10-2010) மூன்று விருதுகளை வழங்கினார்கள்.

கோவை மாவட்டத்தில் இரத்ததான சேவைகளுக்காக மூன்று விருதுகளை பெற்ற ஒரே அமைப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். அல்ஹம்துலில்லாஹ்

மேலும் கோவை மாவட்டத்தில் இரத்ததான சேவைகளுக்காக விருதுகள் பெற்ற ஒரே இஸ்லாமிய அமைப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விருதுகளை மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரியாஸ் அவர்களும் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சுல்தான் மற்றும் கிளை மருத்துவ சேவை அணி செயலாளர்கள் ஆனைமலை கிளை சாதிக், ஆசாத் நகர் கிளை காஜா, செல்வபுரம் கிளை செல்லா,மேட்டுப்பாளையம் கிளை ஜாபர் ஆகியோர் பெற்று கொண்டனர்.