கோவை மேட்டுப்பாளையம் கிளையின் தொலைக்காட்சி நிகழ்சி தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோவை மாவட்டம் மேட்டுபாளையம் கிளையின் சார்பாக கடந்த ஜனவரி மாதம் 1 ம் தேதி முதல் மாயாவி என்ற தொலைகாட்சியில் தினந்தோறும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சிகள் ஒளிபரப்பட்டு வருகிறது.

கடந்த முன்று நாட்களாக 21ம் நூற்றாண்டில் இஸ்லாம் என்ற உரை ஒளிபரப்பட்டு வருகிறது. இந்த தொலைகாட்சி சேனல் மேட்டுபாளையம் , சிறுமுகை, அவிநாசி, காரமடை, பெரிய நாயக்கன் பாளையம் மற்றும் இதை சுற்றியுள்ள நூற்று கனக்கான கிராமங்களிலும் பிரபலமாக உள்ளது.

இந்த பகுதி மாற்றுமத அன்பர்கள் அதிகமாக வாழும் பகுதியாகும் என்பது குறிப்பிடதக்கது சத்திய பிராச்சாரத்தை பல விதங்களில் செய்து வரும் மேட்டுபாளையம் கிளை சகோதரர்கள் இதை சிறப்பாக நடத்தி வருகின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலியை வழங்குவானாக.