கோவை மாவட்ட மாணவரணி தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட மாணவரணியின் தர்பியா 07.08.2011 அன்று நடைபெற்றது. இதில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் மவ்லவி பக்கீர் முஹம்மத் அல்தாபி அவர்கள் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் அஜ்மல் மாணவரணியின் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார்.

இதில் கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் தாவா பணியை வீரியப்படுத்துவது, மது, புகை மற்றும் போதை பொருள்களுக்கு எதிராக பிரசார ஊர்வலம் நடத்துவது என்றும் தீர்மானிக்கபட்டது.

மேலும் கோவை மாவட்ட மாணவரணியின் சார்பாக , முதியோர் இல்லம், தாவா சென்டர், அநாதை இல்லம் போன்றவற்றிக்கு குறைந்தது 50,000 ரூபாய் வீடுவீடாக சென்று திரட்டி தருவது என்றும் முடிவு செய்யபட்டது.