கோவை மாவட்டப் பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட பொதுக்குழு கடந்த 05-12-2010 அன்று மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் தலைமையிலும் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் M.S.சுலைமான் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

மௌலவி தாவூத் கைசர் அவர்கள் “நிர்வாகிகளுக்கு இருக்க வேண்டிய பண்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

2010-11 ஆம் ஆண்டு கோவை மாவட்டம் சார்பாக ரூபாய் 1.50 கோடி சமுதாய மக்களுக்காக அர்பணிப்பு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் பொதுக்குழுவில் பதிவு செய்யப்பட்டது.
இறுதியாக M.S.சுலைமான் அவர்கள் டிசம்பர் 6 போராட்டம் ஏன் நடத்தவில்லை என்பதையும், ஜனவரி 4 போராட்டத்தின் முக்கியத்துவத்தையும் விளக்கி கூறினார்.