கோவை மாவட்டம் செல்வபுரத்தில் 125 மாணர்வர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்!

321கோவை மாவட்டம் தமிழநாடு தவ்ஹீத் ஜமா-அத் செல்வபுரம் கிளையின் சார்பாக ஏழை மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி செல்வபுரம் மர்கஸில் 14.06.2009 ஞாயிற்றுக்கிழமை மாலை 7-மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.

இதில் 125-மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களும் ருபாய் 5000 க்கானகல்வி உதவித் தொகையும்வழங்கப்பட்டது. மதரஸா மாணவர்களின் சிறப்புரையும். சமுதாய விழிப்புனர்வு நிகழ்ச்சிகளும் சிந்தனையை தூண்டும் விதமாக இருந்தது அவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. கிளை நிர்வாகிகளும் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாவட்ட பேச்சாளர்கள் ஜாஹீர்உசேன் மற்றும் சித்தீக் உரையாற்றினார்கள்.