கோவை மாவட்டப் பொதுக்குழு: ஓர் ஆண்டில் ஒரு கோடி ரூபாய்க்கான நலத்திட்ட பணிகள்!

DSCF0050DSCF0051தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் பொதுக்குழு 20.12.2009 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு SMM மஹால் (கோவை உக்கடம் ஆத்துப்பாலம்) அரங்கத்தில் நடைபெற்றது

மாவட்ட தலைவா முஹம்மத்அலி அவாகள் தலைமையேற்க மாவட்ட மற்ற நிர்வாகிகள் முன்னிலை வகிக்க முன்னுரையாக மாநில மேலான்மைக்குழு உறுப்பினா அப்துரஹீம் அவாகள் உரை நிகழ்த்த மாநில பொதுச் செயலாளர் அப்துல்ஹமீத் அவாகள் முன்னிலையில் மாவட்டத்தின் அனைத்து கிளையின் தலைவர்-செயலாளர்-பொருளாளர்கள் தங்களுடைய பணிகளையும் அதன் மூலம் அடைந்துள்ள வளர்ச்சியையும் தெறிவித்தனர்.

மாவட்டம் மற்றும் மாநிலகேள்விகளை எழுப்பினர். கேள்விகளுக்கு பொதுச்செயலாளரும் மாநில தலைவரும் பதில் அளித்தார்கள். மாவட்டம் தொடர்பான கேள்விகளுக்கு அந்த அந்த நிவாகிகள் பதில் அளித்தார்கள்.

மாவட்டத்தின் செயல்பாட்டினை மாவட்ட செயலாளர் உமா பாரூக் எடுத்துரைக்க மாவட்ட வரவு செலவுகளை மாவட்ட பொருளாளர் காஜாநஜ்முதீன் தாக்கல் செய்ய மாவட்ட துணை தலைவர் ஜலால் அஹ்மத் மாவட்ட துணை செயலாளர்கள் சஹாப்தீன் மற்றும் முஜிபுரஹ்மான் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் சுல்தான் மாவட்ட மாணவரனி செயலாளர் யாஸ் ஆகியோ அவாகளது பணிகளை விளக்கினர்.

மாவட்டதுணை செயலாளர் நவ்சாத் மாவட்டத்தின் அனைத்து பணிகளையும் தொகுத்து வழங்கினர் மாவட்டத்தின் அனைத்து கிளைகள் மூலமாகவும் இந்த ஓர் ஆண்டில் மட்டும் ஒருகோடி ரூபாய்க்கு மேலான பணிகள் என்று ஆதாரத்தோடு பட்டியல் இட்ட உடன் அனைவரும் இறைவனைப் புகழ்ந்தாகள்

மாநிலத்தலைவர் உரையுடன் சில நிவாக சீரமைப்பு செய்யப்பட்டது மாவட்டத்தின் பொருளாளராக மாவட்டதுணை செயலாளராக இருந்த நவ்சாத் அவாகள் தோதெடுக்கப்பட்டார்.

மாவட்டதுணைச் செயலாளராக நசீர்அஹ்மத் அவாகள் தோதெடுக்கப்பட்டார் மாவட்ட மருத்துவ சேவை அணிச் செயலாளாராக இருந்த சுல்தான் வாத்தக அணிச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளர்.

பொதுக்குழு தீமானத்தை மாவட்ட பொருளாளர் நவ்சாத் வாசிக்க சிறப்பாக இறைவனின் கிருபையால் பொதுக்குழு நடைபெற்றது.